



முத்தமிழ் பாடசாலை
தமிழ்நாடு கலாச்சார சங்கம் - கனடா
தமிழ்மொழி, தமிழ்க் கலாச்சாரம், தமிழ் மரபு — இவை நம் அடையாளத்தின் உயிரும், நம் வாழ்வின் மூலாதாரமும் ஆகும்.
தமிழின் இனிமை, நம் நெஞ்சை வருடும் அதன் ஒலி, நம் வேர்களின் பெருமையை நினைவூட்டுகிறது. எங்கும் தமிழ் ஒலிக்க, எதிலும் தமிழ் மலர வேண்டும் என்பதே எங்கள் உயர்ந்த நோக்கம்.
நம் தாய்மொழி வழியாக நம் பண்பாடு, நம் மரபு, நம் உணர்வுகள் அனைத்தும் வெளிப்படுகின்றன. அந்த செழுமையான மரபை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லும் பொறுப்பு எங்களுடையது. இதற்காகவே தமிழ்நாடு கலாச்சார சங்கம் – கனடா, முத்தமிழ் பாடசாலை மூலமாக நம் மொழியின் ஒளியை ஒவ்வொரு இதயத்திலும் பரப்பி வருகிறது.
தமிழ் கற்க ஆவலாக இருக்கும் இளம் தலைமுறையினருக்கும்,
தமது பிள்ளைகளுக்குத் தமிழை அறிமுகப்படுத்த விரும்பும் அன்புப் பெற்றோர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள்!
- முத்தமிழ் பாடசாலை 2013ஆம் ஆண்டிலிருந்து 4 வயது முதல் சிறுவர்கள், சிறுமிகளுக்கான தமிழ் மொழி வகுப்புகளை சிறப்பாக நடத்தி வருகிறது.
- பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய மூன்றிலும் தங்கள் திறனை வளர்த்துக்கொள்வதற்கான சூழலை மாணவர்களுக்கு நாங்கள் வழங்கி வருகிறோம்.
- நமது ஆசிரியர்கள் — தமிழகத்தைச் சேர்ந்த கல்வி அனுபவம் வாய்ந்தவர்களாகும். அவர்கள் தமிழ் எழுத்து, சொற்கள் மட்டுமல்லாது, நம் வரலாறு, பண்பாடு, மரபு ஆகியவற்றின்
அழகையும் சிறப்பாகப் பகிர்ந்து வருகின்றனர். - முத்தமிழ் பாடசாலை, நமது குழந்தைகள் எளிதில் புரிந்து கற்கக்கூடிய வகையில், தமிழ்நாடு கல்வி முறையை அடிப்படையாகக் கொண்டு, தனது சொந்த பாடப்புத்தகங்களை உருவாக்கியுள்ளது.
- இன்றே உங்கள் பிள்ளைகளுக்கு தமிழின் வேர்களை அறிமுகப்படுத்துங்கள்.
- தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம், தமிழாக வாழ்வோம் அதுவே நம் அடையாளம், நம் பெருமை, நம் உயிர்.


